Search This Blog

Sunday, August 22, 2010

நேரம் பொன்னானது

சமீபத்தில் மினஞ்சலில் வந்த என் நெஞ்சை தொட்ட ஒரு உண்மை கதை

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வந்தனர் அந்த இளம் தாயும் ஐந்து வயது மகனும்..கணவனை பிரிந்து வாழும் அந்த இளம்தாய் தான் அந்த சிறுவனுக்கு உலகம்..அந்த பெண்ணோ ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை பார்ப்பவள்..வாரத்தில் ஏழு நாளும் பன்னிரண்டு மணிநேர வேலை..மிகவும் இயந்திரத்தனமான வாழ்க்கை...ஒரு நாள் வேலை முடிந்து களைத்து வீட்டிற்கு வருகிறாள் அந்த பெண்.சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் தொலைக்காட்சி பர்த்துகொடிருக்கிறாள்..அப்போது அறைகதவை திறந்து கொண்டு அவளை நோக்கி வருகிறான் அந்த பாலகன்..கையில் ஒரு கரடி பொம்மை...தாயின் அருகில் நின்று கொண்டு வெறித்து பார்கிறான்..ஏரிச்சலடைந்த தாய் உரத்த தொனியில் என்ன வேணும்? என அதட்டுகிறாள்..அதற்கு அந்த குழந்தை எனக்கு ஐந்து டாலர் பணம் வேண்டும் என்றது.... இதை கேட்டதும் கடும் கோபம் கொண்ட தாய் அந்த பாலகனின் தோளை பிடித்து அதட்டி""ஏய் உனக்கு எதற்கு பணம்?உனக்கு என்ன குறை வைத்தேன் நான்?பத்து டாலர் சம்பாதிக்க நான் ஒரு மணிநேரம் நாயை போல உழைக்க வேண்டும் இந்த நாட்டில்..பணமெல்லாம் தரமுடியாது என்று அதட்டினாள்...இதையெல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த அந்த பாலகன்..""அம்மா என்னிடம் ஐந்து டொலர் உள்ளது...இன்னும் ஐந்து டொலர் இருந்தால் அது பத்து டாலர் ஆகிவிடும்..அந்த பத்து டொலரை உன்னிடம் தருகிறேன்..ஒரு மணிநேரம் வேலைக்கு போகாமல் என்னுடன் பேசமுடியுமா ?என பரிதாபமாக கேட்டது..இதை கேட்டதும் அந்த தாயின் உள்ளம் சுக்கு நூறாக உடைந்து போனது...உடனே அந்த பாலகனை ஆர தழுவிக்கொண்டு கதறி அழுதாள் அந்த தாய்..



மேலை தேசங்களில் குடும்ப பிணைப்புகள் எவ்வளவு தூரம் சிதைந்து போய் உள்ளது என்பதற்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.. பணம் பணம் என வாழ்கையை தொலைக்கும் பெற்றோர்கள் இங்கு ஏராளம்..கணவனுக்கு இரவுவேலை..மனைவிக்கு பகல் வேலை என இருவரும் சந்திக்காமலே வாழ்கையை ஓட்டும் பரிதாபங்களும் இங்கு உண்டு..மேலைத்தேய நாடுகளில் குடும்ப கட்டமைப்புக்கள் சிதைவதற்கு முக்கிய காரணம் இந்த இயந்திர மயமான வேலைமுறையாகும்..பணம் சம்பாதிக்கும் வெறியினால் மனைவி,பிள்ளைகள்,உறவுகள் அனைவரையும் மறந்து தினமும் பதினெட்டு மணிநேரம் வேலை செய்யும் மனிதர்களும்,ஒரு நாளின் இருபத்து நான்கு மணிநேரத்தில் இரண்டு மணிநேரம் மட்டும் பெற்றோருடன் செலவழிக்கும் குழந்தைகளும் இங்கு சர்வசாதாரணம்..நான் இலங்கையில் இருக்கும் போது நேரத்தை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை(நான் மட்டும் இல்லை,பலரும் அப்படிதான்)எனக்கு நேரத்தின் மதிப்பை உணர்த்தியது இந்த வெளிநாடுதான்..நான் வெளிநாட்டுக்கு வந்த புதிதில் பனிரெண்டு மணிநேர வேலை..அதுவும் இரவுவேலை..இரவு பதினோரு மணிக்கு தொடங்கினால் முடிய காலை பதினோரு மணியாகும்..பின்பு ஒரு மணிநேரம் இரயில் பயணித்து தான் வீடு செல்ல வேண்டும்..வீட்டுக்கு வந்து படுத்தால் மீண்டு இரவு ஒன்பது மணிக்கு எழும்பி பத்து மணிக்கு கிளம்பவேண்டும்.,.ஒருமணிநேரம் தான் நான் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம்..அப்போதுதான் எனக்கு நேரத்தின் மதிப்பு புரிந்தது..வெளிநாட்டு வாழ்கை என்றல் என்னவென்று புரியவைததும் இந்த நேரம்தான்...யார் நன்கு நேரத்தை கையாளுகிறர்களோ அவர்கள் தான் இங்கு பிழைக்கமுடியும்..இது நான் எனது சொந்த அனுபவத்தில் கண்டு கொண்டது...நேரம் பொன்னானதென்று சும்மாவா சொன்னார்கள்...சரி வேலைக்கு நேரமாகிவிட்டது அடுத்த பதிவில் சந்திப்போம்...

1 comment: