ஒரு உல்டா பாடல்-நடிகர் விஜய் தற்போது ஆட்டோகாரன் பாடலை பாடினால் எப்படி இருக்கும்?....ஒரு நகைச்சுவை கற்பனை...
ஆ நான் வேட்டைக்காரன் வேட்டைக்காரன்
நடிக்கதெரியா சேட்டைக்காரன்
நியாயமில்லா ரேட்டுக்காரன்,வீராசாமி கூட்டுக்காரன்
நல்லா ஆடும் ஆட்டக்காரன்,ரஜினி பிறந்த நாட்டுக்காரன்
மாஸ் ஹீரோ பைத்தியக்காரன்,காங்கிரசு உறவுக்காரன்
இரக்கமில்லா மனசுக்காரண்டா,நான் பிளாப்புக்கெல்லாம் சொந்தகாரண்டா
நான் இப்போதெல்லாம் பிளாப்புக்குத்தான் சொந்தகாரண்டா
மொக்கைன்னா மொக்கைதான் என்படமெல்லாம் மொக்கைதான்
தியேட்டர் பெருசாச்சு சுறாவும் ரிலீசாச்சு
ஹிட்ட எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபரக்கும் நேரத்தில,மொக்கபோட்டு சாவடிப்பேன் தியேட்டரில
அட ரஜனி சார சூப்பர் ஸ்டார்ன்னு சொல்றாங்க
நான் நடிச்சா ரத்தம் வரும் சொல்றேங்க
முந்திவரும் பாரு,என் மொக்க பட ரிலீசு
டென்சன் நல்லா ஏறும்,நீ நம்பிவந்து பாரு (இரக்கமில்லா)
ரீமேக்கு டப்பிங்கு எதுன்னாலும் விடமாட்டேன்
ரீமேக்கு டப்பிங்கு எதுன்னாலும் விடமாட்டேன்
சங்கரோ மணிரத்னமோ மாஸ்ஹீரோன்னாதான் எஸ் சொல்வேன்
அப்பப்போ போரடிச்சா அரசியல்,அன்லிமிடெட் புல்மீல்சு ஒருநேரம்
நான் உண்ணாவிரததிட்கு இலவசமா வாரேம்மா
ரசிகர்களுக்கெல்லாம் ஆப்படிக்க போறேம்மா
ஹாலிவூட்டு ஆளும் அட என்படத்த பார்ப்பான்
கதையே இல்லா படமா இந்த மொக்க மன்னன் நடிப்பான் (இரக்கமில்லா)
சூப்பர் வாத்தியாரே...
ReplyDeleteநீங்க தான் ரீமிக்ஸ் வைரமுத்து...
nandri nanbare...
ReplyDelete