Search This Blog

Wednesday, August 18, 2010

என் கவிதைகள்(கிறுக்கல்கள்)

ஆபிசில் இன்று செமபோர்..தூக்கம் வேற தூக்கியடித்தது..அந்த நேரத்தில் கவிதை என்ற பெயரில் நான் கிறுக்கியவை தான் இந்த பதிவு..

இது சொந்த ஹைக்கூ கவிதை..(மொக்கை)


முகப்பரு

நிலாவின் அழகை அதன் கறைகள் எவ்வாறு மெருகேற்றுகின்றதோ..
அதேபோலவே உன் வதனத்தின் அழகையும் மெருகேற்றுகின்றன..
உன் முகப்பருக்கள்...

விடியல்

உன்னில் என்னை தொலைத்துவிட்டு..
வெளியே வெறுமையில் என்னை தேடிகொண்டிருக்கும் ..
ஒவ்வொரு நொடியும் நரகத்திலும் விட கொடியதடி..
உன்னுள் நான் தொலைந்ததை நீ உணரும் தருணம் தான் என் விடியலடி..

பணம்

தன்னைபடைத்த மனிதனையே தனக்கு..
அடிமையாக வைத்திருக்கும் புத்திசாலி..

எழுதிய மொக்கைகளிலேயே இதுதான் பெரிய மொக்கை

அருமை

நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்..
ஒளியின் அருமை இருளில் தெரியும்..
பெற்றோரின் அருமை அனாதைக்கு தெரியும்..
திரைகதையின் அருமை விஜய் படத்தில் தெரியும்..

இது இணையத்தில் சுட்ட கவிதை

மரங்கொத்தி

உன்னை காயபடுத்த
வேண்டும் என்பதில்
எனக்கு கொஞ்சம் கூட
விருப்பமில்லை
ஆனால் உன்னை
காயப்படுத்தாவிட்டால்
என்னக்கு வேறு அடைக்கலம்
இல்லை...

இப்படிக்கு மரங்கொத்தி

No comments:

Post a Comment