Search This Blog

Saturday, August 21, 2010

இஞ்சி குழம்பு

தேவையானவை

1. இஞ்சி - 50 கிராம்
2. பூண்டு - 3 முழு சின்ன பூண்டு
3. சின்ன வெங்காயம் - 15 - 20
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
5. தக்காளி - 2
6. புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு
7. மிளகாய் வற்றல் - 12
8. மல்லி - 3 மேஜைக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
10. உப்பு
11. தேங்காய் துண்டுகள் - 1 கைப்பிடி
12. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
13. கடுகு - 1/2 தேக்கரண்டி
14. சீரகம் - 1/2 தேக்கரண்டி
15. கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
16. உளுந்து - 1/2 தேக்கரண்டி

செய்முறை

•இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.

•பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு முதலில் இஞ்சி போட்டு வதக்கி எடுக்கவும்.

•அதே பாத்திரத்தில் மிளகாய் வற்றல், தனியாவும் தனி தனியாக வறுத்து எடுக்கவும்.

•இவை அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

•தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும்.

•புளியை கரைத்து வைக்கவும். வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கவும்.

•மிச்சம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

•இதில் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

•பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

•இதில் புளி தண்ணீர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

•நன்றாக கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து எண்ணெய் திரண்டதும் எடுக்கவும்.

நெய் விட்டு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்து செய்வதால் மிகவும் நல்லது. 1 வாரம் கூட வைத்து சாப்பிடலாம். விரும்பினால் தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம். அல்லது இஞ்சுடன் சேர்த்தும் அரைத்து ஊற்றலாம்.

Source:www.arusuvai.com

No comments:

Post a Comment